ரஷ்யா - உக்ரைன் போரின் தற்போதைய நிலை?
ரஷ்யா - உக்ரைன் மீது 7 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை தொடுத்து வருகின்றது. இதேவேளை, 64 கிலோ மீட்டர் தூரத்துக்கு இராணுவ ஆயுதங்களுடன் ரஷ்யப் படைகள், உக்ரைன் கிவ் நகரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவை தனிமைப்படுத்த முற்பட்ட போதிலும், அவை குறித்து கண்டு கொள்ளாத ரசியா, தனது படை பலத்தை உக்ரைனை நோக்கி நகர்த்தி வருகிறது.
உக்ரேன் ரஷ்யாவிடம் அடி பணிய வேண்டும் என்பதே புட்டினின், ஒரே குறியாக உள்ளது தெரிகிறது. அதே சமயம் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இணையம் ஊடாக உரையாற்றியுள்ளார்.
இந்த உரையாடலில் நீங்கள் எங்களோடு இருப்பதை நிரூபியுங்கள். எங்களை போக விட மாட்டீர்கள் என்பதை நிரூபியுங்கள். நீங்கள் உண்மையிலேயே ஐரோப்பியர்கள் என்பதை நிரூபியுங்கள். அப்போதுதான் மரணத்தை வாழ்க்கை வெல்லும். இருளை கிழித்து ஒளி பிறக்கும். உக்ரைனுக்கு மகிமை உண்டாகும்’’ என ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இதுவரை நாட்டை காக்கும் பொறுப்பு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வசம் இருந்தது. இப்போது அது இராணுவ தளபதி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா, ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்க அனைத்து தடைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக அறிவித்து வருகிறது.