உக்ரைனின் நிலை இலங்கையில் ஏற்பட்டிருந்தால் எப்படி இருக்கும்?
ரஷ்யாவின், உக்ரைனிய ஆக்கிரமிப்பு சரி என வாதாடும் ஈழ ஆதரவாளர்கள் சிலரை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.
அவர்களிடமிருந்து கீழ்வரும் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா?
ரஷ்ய நாட்டு மக்களே போருக்கு எதிராக ஏன் வீதிக்கு வந்து போராடுகிறார்கள்?
ஈழமும், உக்ரைன் போல தனி நாடாக பிரிந்து, இப்படி ஒரு ஆக்கிரமிப்பு நிலை இலங்கையில் ஏற்பட்டிருந்தால் எப்படி இருக்கும்?
ஒரு நாடு, தான் விரும்பியபடி முடிவுகளை எடுப்பதில் என்ன பிரச்சனை?
எல்லா கமியூனிசவாதிகளாலும் வாய் திறக்க முடிவது முதலாளித்துவ நாடுகளில் வாழ்வதால்தான். இப்படி உங்களால் கமியூனிச நாடுகளில் இருந்து பேச முடியுமா?
நீங்கள் ஏன் அந்த கமியூனிச நாடுகளுக்கு அகதியாக போகவில்லை? என ஈழ ஆதரவளார்கள் சிலர் கேள்வி எழுப்பி வருவதாக முகநூலில் ஜீவன் பிரசாத் என்பவர் இந்த கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.