உக்ரைன் மக்களை பொதுவெளியில் சுட்டுக்கொல்ல ரஷ்யா திட்டம்? வெளியான அதிர்ச்சி தகவல்
உக்ரைன் நாட்டில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் இருக்கும் மக்களை பொதுவெளியில் தூக்கிலிட அல்லது சுட்டுக்கொல்ல ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது 9-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் இதுவரையில் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்யப் படைகளால் உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரஷ்யப் படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உக்ரைன் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளியில் தூக்கிலிட அல்லது சுட்டுக்கொல்ல ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெள்யாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, மக்களின் மன உறுதியை சிதைக்க பொதுவெளியில் மக்களை தூக்கிலிட ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய உளவு அமைப்பின் ரகசிய ஆவணங்களில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், உக்ரைன் மக்களின் மன உறுதியை சிதைக்கும் வகையில் போராட்டத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மற்றும் போராட்டம் நடத்துபவர்களை தலைமை தாங்குபவர்களை கடுமையான சிறை தண்டனை விதித்த உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.