பெற்றோல் இல்லாமல் நின்ற ரஷ்யா டாங்கி...கேலி செய்த உக்ரேனியர்: வைரலாகும் காணொளி
உக்ரைன் மீது ரஷ்யா தற்போது பயங்கரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் கீவ் பகுதியில் மக்கள் நடமாட வேண்டாம் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனின் சில பகுதியில் ரஷ்யாவின் டாங்கிகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.
இந்த சூழலில் ரஷ்யா நாட்டின் டாங்கி ஒன்று பெற்றோல் இல்லாமல் வலையில் நின்றுக் கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக காரில் வந்த உக்ரேனியர் ஒருவர் அதனை கேலி செய்யும் விதமாக பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது,
"தங்களது டாங்கியில் பெற்றோல் இல்லை என்று நினைக்கிறன், நான் வேண்டுமானால் தங்களை டாங்கியுடன் சேர்த்து ரஷ்யாவுக்கு அழைத்து செல்லட்டுமா" என கிண்டலடித்துள்ளார்.
மேலும் போர் நிலவரம் குறித்து தங்கள் நாட்டில் என்ன கூறுகிறார்கள் என ரஷ்யா ராணுவ வீரர்கள் காரில் வந்த நபரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது,
"உக்ரைன் தற்போது நன்றாக செயல்பட்டு வருவதாகவும். கூடிய விரைவில் ரஷ்யர்கள் சிறைபிடிக்கப்படலாம்" என்றும் துணிச்சலாக பதிலளித்துள்ளார்.
தற்போது இந்த காணொளி வைரலாகி வருகிறது.
A priceless exchange of a brave Ukrainian citizen with Russian army stuck out of fuel. ENGLISH SUBTITLES.
— Ali ??? (@aliostad) February 26, 2022
[Thanks to my Ukrainian friend for transcription and pic.twitter.com/Rar3WRXEwD