ரஷ்யாவை சர்வதேச சமூகத்திலிருந்து விலக்க வேண்டும் ; உக்ரேனிற்கு உதவிக்கரம்; அவுஸ்தியேலியா அதிரடி
ரஷ்யாவை சர்வதேச சமூகத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்ட நாடாக நடத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட்மொறிசன் (Scott Morrison)தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏவுகணை வெடிபொருட்களிற்காக அவுஸ்திரேலியா உக்ரைனிற்கு 70 மில்லியன் டொலர்களை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார். அதேவேள இரஸ்யாவை இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ள அவர் ஜி20 அமைப்பில் அதன் உறுப்புரிமை குறித்து மீளாய்வு செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் ரஷ்யாவுடன் எவரும் எந்த ஈடுபாட்டையும் கொண்டிருக்ககூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் போரிடுவதற்கு அவுஸ்திரேலியர்கள் செல்வது ( இரு தரப்பிற்கு சார்பாகவும்) குறித்து எச்சரித்துள்ள பிரதமர், அது சட்டபூர்வமாக தெளிவற்ற தற்கொலை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக உக்ரைனிற்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை வழங்குவது குறித்து சமிக்ஞைகளை வெளியிட்டுவந்த அவுஸ்திரேலிய அரசாங்கம் இன்று இது குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது.
உக்ரைனின் உயிராபத்தை ஏற்படுத்தும் ஏற்படுத்தாத தற்பாதுகாப்பிற்காக 70 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை சந்திப்பின் பின்னர் பிரதமர் ஸ்கொட்மொறிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார்.