ரஷ்யாவை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும்: விடுக்கப்பட்ட கோரிக்கை
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, அந்நாட்டை முற்றிலுமாக தனிமைப்படுத்துமாறு உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரி குலேபா உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ட்விட்டர் பதிவில், ரஷ்யாவின் தூதர்களை வெளியேற்றி நாட்டின் பொருளாதாரத்தை தனிமைப்படுத்த அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யப் படைகளின் ஏவுகணைத் தாக்குதலால் சேதமடைந்த கியேவில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் புகைப்படத்தை இணைத்து அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், உக்ரைனின் உள்துறை அமைச்சரின் ஆலோசகரான அன்டன் ஹெரேஷென்கோ, ரஷ்யா பொதுமக்களை குறிவைக்கவில்லை என்றும், ரஷ்ய படைகள் கிட்டத்தட்ட 40 சிவிலியன் பகுதிகளில் சோதனை நடத்தியதாகவும் பொய் கூறுவதாக குற்றம் சாட்டினார்.