உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் திடீர் ஊடறுப்பு: வெளியேறும் பெண்கள்! தடுமாறும் உலக நாடுகள்
உக்ரைன் நாட்டில் ஓராண்டு மேலாக நிலவிவரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இதுவரையில் நாட்டைவிட்டு 43 மில்லியன் மக்கள் வெளியேறியுள்ளதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்த்துள்ளார்.
இலங்கையை தளமாக கொண்டு செயற்பாடு லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ்,
உக்ரைனில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக வெளியேறும் அகதிகளில் 68 சதவீதமானோர் பெண்கள் ஆவர்.
இவ்வாறு வெளியேறிய பெண்களில் 2.5 மில்லியன் பேர் பெண் தொழிலாளர்கள் ஆவர்.
இந்த மக்கள்தொகை வெளியேற்றமானது உக்ரைனின் பொருளாதாரத்தின் சரிவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இருப்பினும், 18 தொடக்கம் 60 வயதிற்கு இடைப்பட்ட ஆண்களை உக்ரைன் அரசாங்கம் வெளியேற்றவில்லை.
இதற்கு காரணம் பலவந்த பயிற்சியின் மூலம் அவர்களை போருக்குள் உள்வாங்கும் நோக்குடன் செயற்பட்டுவதையே உக்ரைன் திட்டமாக கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார்.
இது குறித்த உக்ரைன் ரஷ்ய யுத்தத்தின் பின்னணியையும் உக்ரைனுக்குள் வல்லரசுகளின் நகர்வுகளையும் ஊடறுத்து வருகிறது இன்றைய ஊடறுப்பு.