ரஷ்யா விடுத்த இறுதி பகீரங்க எச்சரிக்கை: உக்ரைன் அதிபர் கொடுத்த பதிலடி!
உக்ரைன் மீது தாக்குதலை நடத்திவரும் ரஷ்ய அந்நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள ஒரு வணிக வளாகம் மீது ரஷ்ய துருப்புகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அந்த வணிக வளாகத்தை உக்ரைன் இராணுவத்தினர் ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்டவற்றை சேமிக்க பயன்படுத்தி வருவதை அறிந்த ரஷ்ய துருப்புக்கள் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் ராணுவத்தினர் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும் என்ற ரஷ்ய துருப்புக்கள் விடுத்திருந்த எச்சரிக்கையை உக்ரேனிய அதிகாரிகள் நிராகரித்தனர்.
உக்ரைன் தென்கிழக்கு நகரங்களில் இருக்கும் உக்ரேனியர்கள் அதிகாலை 5 மணிக்குள் சரணடையுமாறும், அவ்வாறு செய்பவர்கள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ரஷ்ய துருப்புகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், ரஷ்யாவின் இறுதி எச்சரிக்கைகளுக்கு, உக்ரைன் ஒருபோதும் அடிபணியாது என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.