உக்ரைனின் வரலாற்று சிறப்புமிக்க கடல் எல்லையை மூடிய ரஷ்யா!
உக்ரைனுடனான கருங்கடல் எல்லையை மூடிவிட்டதாக ரஷ்ய இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 2 வாரங்களுக்கும் மேலாக போர் நடத்தி வருக்கின்ற நிலையில் உக்ரைனில் பல்வேறு நகரங்களை முழுமையாக ரஷ்ய துருப்பகள் கைப்பற்றியுள்ளன.
இந்த நிலையில் உக்ரைனுடனான வரலாற்று சிறப்பு மிக்க கருங்கடல் எல்லையை மூடிவிட்டதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ரஷ்ய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ரஷ்ய கடற்படை துருப்புகள் உக்ரைனின் கருங்கடல் எல்லையில் தொலைதூர முற்றுகையை நிறுவியுள்ளன.
கருங்கடல் எல்லை மூடப்பட்டதன் மூலம் சர்வதேச கடல் வர்த்தகத்தில் இருந்து உக்ரைன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் வாரங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும்” என கூறப்பட்டுள்ளது.