ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் விளம்பரப்பலகைக்கு விசமிகளால் நேர்ந்த கதி!
ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் விளம்பரப் பெயர்ப்பலகை நேற்று இரவு சேதமாக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரின் பம்பைமடு இணைப்பாளரால் பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா, புதிய கற்பகபுரம் வீதிக்கு கார்பட் வீதியாக அமைக்கப்பட்ட ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் விளம்பரப் பெயர்ப்பலகையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 8 ஆம் திகதி திங்கட்கிழமை புதிய கற்பகபுரம் வீதி கார்பட் வீதியாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் அபிவிருத்தி நிதியில் புனரமைப்பு செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இரு தினங்களின் பின்னர் நேற்று (09) செவ்வாய்கிழமை அவ்வீதிக்கு அமைக்கப்பட்ட விளம்பரப் பெயர்ப்பலகை விசமிகளால் சேதமாக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினரின் புகைப்படம் கிளித்தெறியப்பட்டுள்ளது.
குறித்த சம்பவங்களுடன் அப்பகுதியிலுள்ள சிலர் தொடர்புபட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்குமாறும் குறித்த முறைப்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் மில்டன் ரமேஸ் ஜெயமாதுரியால் பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும், முறைப்பாட்டிற்கான மூலப் பிரதி முறைப்பாடு மேற்கொண்டவருக்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.