டீசலுக்கு 41 பில்லியன் ரூபாய் நிவாரணம் ; அமைச்சரவை அனுமதி
எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு டீசலுக்காக 41 பில்லியன் ரூபாவை நிவாரணமாக வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய கிழக்கில் தொடர்ந்தும் நிலவி வரும் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருளுக்கான விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது.

இதனால் சர்வதேச சந்தைக்கு நிகரான வகையில் எரிபொருள் விலை உள்நாட்டு சந்தையில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் சூழல் காணப்படுகின்றது.
அதனால் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை குறைப்பதற்காக, இந்த நெருக்கடி தருணத்தில் எரிபொருளுக்கான நிவாரணத்தை பெற்றுக் கொடுப்பதன் ஊடாக உள்நாட்டு சந்தையில் எரிபொருள் விலையினை ஓரளவு கட்டுப்படுத்துவதற்கான முயற்சியினை அரசாங்கம் முன்னெடுக்கும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில்.
இவ்வாறு எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு நிவாரணத்தை வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.