அரச வங்கியில் ரூ. 35 மில்லியன் கொள்ளை; உதவி மேலாளரும் பாதுகாப்பு அதிகாரியும் கைது
களுத்துறை ஹொரணை அரச வங்கியில் இருந்து ரூ. 35 மில்லியன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அந்த வங்கியின் உதவி மேலாளரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன் தினம் (03) பிற்பகல் 3.00 மணியளவில் மற்றொரு வங்கியில் வைப்பிலிடுவதற்காக அரச வங்கியிலிருந்து வெளியில் கொண்டு வரப்பட்டுள்ளது.
பணம் அரச வங்கியிலிருந்து வெளியில் கொண்டு வரப்பட்ட போது, நபர் ஒருவர் அந்தப் பையைத் திருடிக்கொண்டு அப்பகுதியிலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.