300 மில்லியன் ரூபாய் நிதி மோசடி; கூட்டுறவு வைத்தியசாலைச் சங்கத்தின் தலைவர் கைது
மாத்தறை மாவட்ட கூட்டுறவு கிராமிய வங்கிச் சங்கத்திற்குச் சொந்தமான 300 மில்லியன் ரூபாய் நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில், மாத்தறை மாவட்ட கூட்டுறவு வைத்தியசாலைச் சங்கத்தின் தலைவர் சமிந்த பிரசன்ன குணசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூட்டுறவு சட்டவிதிமுறைகளை மீறி, வெவ்வேறு திட்டங்களுக்காகப் பணத்தைப் பயன்படுத்துவதாகக் கூறி, நிதியைச் தனது தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்தியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று வெள்ளிக்கிழமை (10) காலை மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.