ரூ.24.5 லட்சம் ஜாக்பாட் ; துபாய் லாட்டரியில் தமிழருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
துபாய் லொட்டரியில் சென்னையைச் சேர்ந்த சக்தி விநாயகம் 24.5 லட்சம் ஜாக்பாட் அடித்தார்.
துபாயில் 20 ஆண்டுகளாக வசித்து வரும் சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சக்தி விநாயகம், தங்குமிடப் பொறுப்பாளராக பணியாற்றி வந்தவர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் The Big Ticket லொட்டரி வாங்கி வருகிறார்.
இதில் சம்பந்தப்பட்ட லொட்டரி குலுக்கல் நிகழ்ச்சி தொகுப்பாளியிடம் இருந்து அழைப்பு வந்த போது, அவருக்கு ரூ.24.5 லட்சம் ஜாக்பாட் வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சக்தி விநாயகம் இதுபற்றி கூறியதாவது,
வெற்றி பெற்ற அழைப்பு வந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பரிசுப் பணத்தை என்ன செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. ஒரு பெரிய தொகையை வெல்லும் நம்பிக்கையில் தொடர்ந்து Big Ticket வாங்குவேன்.என தெரிவித்துள்ளார்.