யாழில் வரிசையில் நிற்பவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் புதிய வியூகம்
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியால் வரிசை யுகம் ஆரம்பித்துள்ளது.நாளைய தினம் எரிபொருள் பெற வேண்டுமானால் முதல் நாளே வாகனங்களை வரிசையில் விட வேண்டும். அத்துடன் ஒரு நாள் முழுவதும் வாகனத்தை காவல் காக்க வேண்டும்.
அப்போது தான் மறுநாள் எரிபொருள் பெறக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் யாழில் புதிய வியாபாரம் ஒன்று ஆரம்பித்துள்ளது.
அதாவது எரிபொருள் வரிசையில் முதல் நூறு எண்ணிக்கைக்குள் இடம் பிடித்துக் கொடுத்தால் 1000 ரூபா நபர் ஒருவருக்கு கூலியாக வழங்கப்படுகிறது
நாள் முழுவதும் அந்த இடத்திலேயே தங்கி நின்று மோட்டார் சைக்கிளை பாதுகாத்து மறுநாள் காலை உரிமையாளரிடம் இடத்தையும் வாகனத்தையும் ஒப்படைத்தால் 1500 ரூபா கூலியாக வழங்கப்படுகிறது.