ஜெயிலர் ரஜினிகாந்தாக மாறிய குமார் சங்கக்கார ; வைரலாகும் புதிய வீடியோ
ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமைப் பயிற்சியாளராக இலங்கையைச் சேர்ந்த சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ள தகவலை ரஜினியின் ஜெயிலர் பட ஸ்டைலில் அணி நிர்வாகம் வீடியோவாக வெளியிட்டுள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் கேப்டனுமான குமார சங்கக்காரா, 2021 முதல் 2024 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார்.

தலைமைப் பயிற்சியாளர்
இதனிடையே கடந்த சீசனில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் கேப்டனுமான ராகுல் டிராவிட் அப்பொறுப்பை வகித்தார். கடந்த சீசனில் ராஜஸ்தான் அணி 9ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் சங்கக்காரா தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அணியின் இயக்குநராக ஏற்கெனவே சங்கக்கார உள்ள நிலையில் தற்போது இரட்டைப் பொறுப்புகளை வகிக்கவுள்ளார்.