ராஜஸ்தான் ரோயல்ஸ் அதிரடி வெற்றி ; IPL தொடரில் அடுத்த சுற்றுக்கு தெரிவு
இந்தியன் பிரிமியர் லீக் (IPL) தொடரின் சூப்பர்-4 சுற்றுக்கான தகுதியை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி பெற்றுள்ளது.
இன்று (24) நடைபெற்ற முக்கியமான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 30 ஓட்டங்களால் வீழ்த்தியதன் மூலம் அந்த அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்தது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது.

அந்த அணியின் சார்பில் துருவ் ஜூர்ள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38 ஓட்டங்களைப் பெற்றார். மேலும் நடுப்பகுதி துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பும் அணியின் மொத்த எண்ணிக்கையை உயர்த்த உதவியது.
பதிலுக்கு 206 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் அணியின் கட்டுப்பாடான பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் தடுமாறியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை மட்டுமே பெற்றதால் தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளின் அடுத்த சுற்று வாய்ப்புகளும் முடிவுக்கு வந்துள்ளன.
அதேவேளை, ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைஸர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார சங்ககார செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.