ராஜஸ்தான் அணியை வீழ்த்திய ரோயல் சேலஞ்சர்ஸ் அணி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு (வியாழக்கிழமை) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 42-வது லீக் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டின் முதலில் இடம்பெற்ற நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்ளை பெற்று ராஜஸ்தான் அணிக்கு 206 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
இந்த வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.