மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு
கிழக்கு கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடலை அண்டிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளகொந்தளிப்பு காரணத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள சீறற்ற வானிலை மாற்றத்தினால் கடல் கொந்தளிப்பான நிலை காணப்படுவதுடன், இன்று மாவட்டத்தின் பல பகுதிகள் மற்றும் மப்பும் மந்தாரமாக காலநிலை காணப்பட்டு வருவதுடன் சிறிய அளவிலான மழை வீழ்ச்சியும் தொடர்ந்து வருகிறது.

கடல் சீற்றம் காரணமாக தொழில்களுக்கு செல்லவில்லை
அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் வாழும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக இன்று தமது அன்றாட மீன்பிடி தொழில்களுக்கு செல்லவில்லை.
இதனால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது
இதேவேளை இன்று மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் நாவலடி வாகரை வாழைச்சேனே களுவாஞ்சி குடி கல்லாறு போன்ற பகுதிகளில் தமது மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி வைத்துள்ளதுடன் கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு சம்பந்தமான செயற்பாடுகளை மிகவும் அவதானித்து வருவதை காணக் கூடியதாக உள்ளது மாவட்டத்தின் கடற்கரைகளை அண்டிய பிரதேசம் தற்போது வெறுச்சோடி காணப்படுகின்றது.