ரோசிக்கு வந்த ஆசை; கைகொடுக்குமா கட்சி!
வரும் உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாநகரசபை முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தற்போதைய முதல்வர் ரோசி சேனநாயக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் இது குறித்துதீர்மானிக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
மேயர் வேட்பாளர் குறித்து கட்சி எதனையும் தீர்மானிக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கபண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேச்சு இடம்பெறுகின்றதாக குறிப்பிட்டுள்ள அவர் எனினும் ரோசி சேனநாயக்க குறித்து விசேடமாக ஆராயப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சுதந்திரக்கட்சியிலிருந்து வெளியேறியுள்ள பைசர் முஸ்தபாவை களமிறக்குவது குறித்து ஐக்கிய தேசியக்கட்சி பரிசீலித்து வருகின்றதாகவும் தெரியவருகின்றது.