தெஹிவளையில் காதல் ஜோடியின் முகம் சுழிக்க வைக்கும் செயல்! சிக்கிய பெரும் புள்ளிகள்
தகாத தொழிலுக்கு இணையத்தளம் ஊடாக விளம்பரம் செய்து, உல்லாச ஆசையில் வருபவர்களை தகாத முறையில் வீடியோ எடுத்து மிரட்டிய இளம் ஜோடி அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளது.
இந்த ஜோடியிடம் சிக்கியவர்கள் யாராவது இருப்பின், வெட்கத்தை விட்டு பொலிசாரிடம் முறையிட்டு நீதியை பெற்றுக்கொள்ள முடியும். தெஹிவளையில் அடுக்குமாடி குடியிருப்பில் அறையை வாடகைக்கு பெற்று இந்த ஜோடி, நூதனமாக பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.
மோசடியாக பணம் பறிக்க திட்டமிட்டால், இறுதியில் என்ன நடக்குமென்பதற்கு உதாரணமாக இந்த சம்பவமும் அமைந்துள்ளது. ஹோமாகமவை சேர்ந்த 24 வயதான இளைனும், வெள்ளவத்தையை சேர்ந்த 26 வயதான யுவதியும் சந்தித்து, காதல் வசப்பட்ட பின்னர், வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த காதல் ஜோடி பொருளாதார நெருக்கடியை சந்தித்த போது, காதலனே இந்த விபரீத யோசனையை முன்வைத்துள்ளார். அண்மையில் 13 வயதான சிறுமியை இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் வெளிவந்து, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அது பற்றிய தகவல்களும் வெளியாகியிருந்தன.
இந்த சம்பவத்தை அறிந்த ஹோமாகம இளைஞன், தனது காதலியை வைத்து பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார். இது பற்றி காதலியிடம் சொன்ன போது, முதலில் அவர் தயங்கினாலும், காதலன் நம்பிக்கையூட்டியுள்ளார். “இதனால் எந்த பிரச்சனையும் வராது.
சில புகைப்படங்கள் எடுத்து, மங்கலான படங்களை பதிவிடலாம். அதை பார்த்து அழைப்பேற்படுத்துபவர்களை இருப்பிடத்திற்கு அழைக்கலாம். அவர்களுடன் நிங்கள் உல்லாசமாக இருக்க தேவையில்லை. அவர்கள் அறைக்கு வந்ததும், குளித்து விட்டு வருமாறு குளியலறைக்கு அனுப்புங்கள். அந்த சமயத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் என நான் உள்நுழைந்து விடுவேன். அவர்களிடமிருக்கும் பணம், நகைகளை பறித்து விட்டு அனுப்பி விடலாம்.
அவர்கள் பொலிசுக்கு போவார்கள் என பயப்படாதீர்கள். இப்படியான இடங்களிற்கு வந்து சிக்கியவர்கள், வெட்கத்தை விட்டு பொலிஸ் நிலையம் செல்ல மாட்டார்கள்“ என நம்பிக்கையூட்டியுள்ளார். காதலியை சமரசப்படுத்திய சில நாட்களில் தெஹிவளையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்தார். சில அத்தியாவசியப் பொருட்களை எடுத்துக்கொண்டு சென்று இருவரும் தனித்தனி அறைகளில் வசித்தனர்.
பின்னர் சில நாட்களின் பின்னர், சாதாரண தம்பதிகளாக- திருமணம் செய்யாமலே- ஒரே அறையில் வாழத் தொடங்கினர். சில நாட்களுக்குப் பிறகு, இணையத்தில் அவர்கள் ஒரு விளம்பரத்தை வெளியிட்டனர்.
அதில் காதலியின் சில அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் பெண்களின் மங்கலான புகைப்படங்களை வெளியிட்டனர். அதில் 23 வயதான யுவதி “சேவை“ செய்ய காத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. விளம்பரம் வெளியான உடனேயே, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு வந்தது. அது பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பிரபல தனியார் நிறுவனத்தின் மேலாளரிடமிருந்து வந்தது.
புகைப்படத்தில் இருப்பதும், பேசுவதும் ஒருவர் தானா என்பதை அந்த நபர் கேட்டறிந்து கொண்டார். தனது வயது 50 என அவர் குறிப்பிட்ட போது, “உங்களுக்கு ஒரு நல்ல அனுபவம் இங்கு கிடைக்கும். முதலில் வந்து பாருங்கள் சேர்” என தொலைபேசியில் பேசிய பெண் குரல் குறிப்பிட்டது.
மாலை 4 மணிக்கு வருவதாக அவர் குறிப்பிட்டார். இதையடுத்து காதலன் திட்டத்தை காதலியிடம் குறிப்பிட்டார். “அவரை அடுத்த அறைக்கு அழைத்து வாருங்கள்.
முதலில், அவரை குளித்துவிட்டு வரச் சொல்லுங்கள். அவர் குளியலறைக்குள் சென்றதும், நான் அறைக்கு வருவேன். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் – பேசாமல் இருப்பது மட்டும்தான்” என விளக்கினார்.
மாலை 4 மணியளவில் தெஹிவளை சந்திப்புக்கு வந்த மேலாளர், அந்த யுவதியை அழைத்து, வர வேண்டிய இடத்தின் முகவரியை கேட்டார். யுவதி சொன்ன இடத்திற்கு அவர் வந்து, அறைக்கு வந்ததும், அவர் உணர்ச்சி வசப்பட்டு, யுவதியை முத்தமிட முயன்றார்.
ஆனால் யுவதி மறுத்து விட்டார். “போய் முதலில் குளித்து விட்டு வாருங்கள். பிறகு நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.” யுவதியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, அவர் குளியலறைக்குச் சென்றார். விரைவாக உடலை கழுவிக் கொண்டு, ஒரு துண்டை சுற்றிக்கொண்டு, வெளியே வந்தார்.
அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த யுவதி உட்கார்ந்திருக்க, முன்னால் ஒரு இளைஞன் விசாரித்தபடி நின்றான். குளியலறைக்குள் வந்தவரை காட்டி, யார் அவர் என யுவதியிடம் விசாரித்தான். யுவதி தலையை குனிந்தபடி இருந்தார்.
அந்த இளைஞன் யார் என மேலாளர் கேட்டார். “நான் தெஹிவளை ஓஐசி. யார் நீங்கள்?“ என வினாவினான். உல்லாசத்திற்கு வந்த முதியவருக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. “தயவுசெய்து என்னை மன்னியுங்கள் ஐயா. நான் இப்படியான தவறுகள் வழக்கமாக செய்வதில்லை.
என்னை போலீசுக்கு அழைத்து செல்லாதீர்கள். இன்று மட்டும் மன்னியுங்கள். நான் ஒரு குடும்பகாரன்” என மன்றாடினார். “அது எங்களுக்குத் தெரியும். இப்படியான கீழ்த்தரமானவர்களை மன்னிக்க முடியாது” என போலி பொலிஸ் அதட்டலாக விட்டார். “ஐயா, நீங்கள் கேட்பதை நான் தருகிறேன்.” அவரது பணப்பையில் எவ்வளவு இருக்கிறது என பார்க்கும்படி யுவதியிடம், அந்த போலி பொலிஸ் கட்டளையிட்டார். அவரது பணப்பையை எடுத்து யுவதி சோதனையிட்டார்.
முப்பத்தைந்தாயிரம் ரூபாய் இருந்தது. “இப்படியான காமப் பிசாசுகளிற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்கப்பட வேண்டும். எனவே நீங்கள் அந்த பணத்தை வைத்திருங்கள். அவர் கையில் ஒரு மோதிரம் உள்ளது, இல்லையா? அதையும் எடுங்கள் ” போலிப்பொலிஸ் கட்டளையிட்டார். “ஐயா தயவுசெய்து அதைவிடங்கள். அது என் திருமண மோதிரம்… நான் உங்களுக்கு கொஞ்சம் பணம் எடுத்து தருகிறேன்” என மன்றாடினார். ஆனால் போலிப் பொலிஸ் விடவில்லை. உல்லாசத்தற்கு வந்தவரிடமருந்து சகலதையும் உருவிவிட்டே அனுப்பினார்.
அங்கிருந்த வந்த பின்னர், போலி பொலிசிடம் ஏமாந்ததை அவர் உணர்ந்தார். என்றாலும், உண்மையான பொலிசிடம் சென்று இதை முறையிட அவர் வெட்கப்பட்டார். குடும்பத்திற்குள் தெரிந்தால் சிக்கலாகி விடும் என பேசாமல் இருந்து விட்டார். முதல் வியாபாரம் வெற்றிகரமாக அமைந்ததால், அவர்கள் தொடர்ந்து இந்த மோசடி வியாபாரத்தை நடத்தினார்கள். நீங்கள் விரும்பும் எந்த வயது இளம் பெண்கள் இருப்பதாக இணையத்தில் விளம்பரம் செய்தார்கள்.
அந்த வலையில் வீழ்பவர்களை அழைத்து வந்து, மிரட்டி பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்தனர். சிலரை மிரட்டி நிர்வாண வீடியோக்களை கூட எடுத்து பெருந்தொகை பணம் பறித்தனர். இப்படி ஏமாந்தவர்களில் பொறியாளர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இருந்தனர். சில மாதங்கள், எந்த தடையும் இல்லாமல் மக்களை ஏமாற்றி, அவர்களின் பணத்தையும் மதிப்புமிக்க பொருட்களையும் பறித்துக்கொண்டு வசதியான வாழ்க்கை வாழ்ந்தனர்.
ஓமானில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் சில வாரங்களுக்கு முன்பு இலங்கை திரும்பினார். அவர், இந்த விளம்பரத்தை இணையத்தில் பார்த்தார். அதன்படி, அவர் தொலைபேசி எண்ணை அழைத்து ஒரு இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்க அந்த இடத்திற்கு வந்தார். வழக்கத்தின் பிரகாரம் எல்லாம் நடந்தது.
அவர் குளித்து விட்டு வந்த போது தெஹிவளை ஓஐசியென கூறி இளைஞன் நின்றார். ஒமானிலிருந்து வந்தவரை மிரட்டி அவரது ஆடைகளை களைந்து நிர்வாணமாக வீடியோ எடுத்தனர். அவரிடமிருந்தும் அனைத்து பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த செயலால் ஓமானிலிருந்த வந்தவர் கடுமையான கோபமடைந்தார்.
வெட்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்கள் இருவருக்கும் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தார். அதன்படி, அவர் தெஹிவளை போலீசில் சென்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் செயல்பட்ட, தெஹிவளை பொலிசார் அந்த ஜோடியை கைது செய்தனர்.
அழகிய யுவதிகள் உல்லாசத்திற்கு இருப்பதாக கூறி, இணையத்தில் விளம்பரங்களை வெளியிட்டு, பலரை அழைத்து வந்து பணம் பறித்ததை சந்தேகநபர்கள் ஏற்றுக்கொண்டனர். மருத்துவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உட்பட பலர் வந்து பணத்தை பறிகொடுத்துள்ளனர்.
எனினும், சமூக அவமானம் காரணமாக அவர்கள் அதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை.
தெஹிவளையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இந்த தம்பதியினரின் ஆசை வலையில் சிக்கி, அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்று, பணத்தை இழந்தவர்கள் வெட்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தெஹிவளை போலீசில் புகார் செய்து, நீதியை பெற்றுக்கொள்ள முடியும்.