நடுரோட்டில் பைக்கில் காதலர்களின் எல்லைமீறிய செயல்; திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்!
நடுரோட்டில் பைக்கில் காதலர்கள் செய்த ரொமான்ஸ் செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவர்களின் செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் திட்டித்தீர்த்து வருகின்றனர்.
இந்தியாவின் டெல்லியில் உள்ள பரபரப்பான சாலை ஒன்றில் காதலர்கள் எல்லைமீறிய செயலில் ஈடுபட்டுள்ளனர்.
வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
காதலியை பைக்கின் பெட்ரோல் டேங்கில் அமர வைத்துக் கொண்டு இளைஞர் செல்லும் வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது.
Idiot's of Delhi
— ????? ????? ?️? (@Buntea) July 16, 2023
Time - 7:15pm
Day - Sunday 16-July
Outer Ring Road flyover, Near Mangolpuri@dtptraffic pic.twitter.com/d0t6GKuZS5
யுவதியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட படியே பைக்கை அதிவேகத்தில் ஓட்டி செல்கிறார். இதனை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், சாலை பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்காமல், ஹெல்மெட்டும் அணியாமல் பரபரப்பான சாலையில் காதலர்கள் இவ்வாறு நடந்து கொள்வது அருவருக்கத்தக்கது என பல்லௌம் கருத்து கூறி வருகின்றனர்.