அதிரடி காட்டிய ரோகித் - சூர்யக்குமார்: நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா!
இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி நியூஸிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி
பெற்றுள்ளது.
இந்த போட்டியானது ஜெய்பூரில் அமைந்துள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இடம்பெற்றது.
மேலும் இந்த போட்டியில் இந்தியா அணி தலைவராக ரோகித் சர்மாவும், நியூசிலாந்து அணியின் தலைவராக டீம் செளதியும் செயற்பட்டனர்.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இந்நிலையில், நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கப்தில் மற்றும் மிட்செல் துடுப்பாட களமிறங்கினர்.
இதில் புவனேஸ்வர் குமார் பந்துவீழ்ச்சியில் மிட்செல் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் களமிறங்கிய சாப்மேன், கப்திலுடன் ஜோடி சேர்ந்து இருவரும் அற்புதமாக விளையாடினர்.

இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். இருவரும் 2 ஆவது விக்கெட்டுக்கு 110 ஓட்டங்களை சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில், சாப்மேன் 63 ரன்களுக்கு அஸ்வின் பந்து வீழ்ச்சி ஆட்டமிழந்தார். 50 பந்துகளைச் சந்தித்த சாப்மேன் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர் உள்பட 63 ஓட்டங்கள் எடுத்தார்.
அதே ஒவரிலே பிலிப்ஸ் ஓட்டங்கள் எதும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார். ஒரு புறம் தொடக்க வீரர் கப்தில் அதிரடியாக அடிவந்த நிலையில் நியூசிலாந்து அணியின் எண்ணிக்கை 150 ஓட்டங்களை தொட்டப்போது கப்திலை தீபக் சாஹர் வீழ்த்தினார். கப்தில் 42 பந்துகளில் 70 ஓட்டங்கள் விளாசினார். இதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும்.

அடுத்து களமிறங்கிய செய்பெர்ட் 12 ஓட்டங்களுக்கும், ரவிந்த்ரா 7 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்களும், சிராஜ் மற்றும் சாஹர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலங்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ராகுல் நிதானமாக விளையாட, கேப்டன் ரோகித் அதிரடியாக விளையாடினார்.

அணியின் எண்ணிக்கை 50 ஓட்டங்கள் இருந்த போது ராகுல் 15 ஓட்டங்களில் சாண்ட்னர் பந்தில் சாப்மேனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ரோகித் சர்மாவோடு ஜோடி சேர்ந்த சூர்யக்குமார் யாதவ்வும் அடித்து ஆட் தொடங்கினர். அரைசதத்தை நெருங்கிய நிலையில் ரோகித் 48 ஓட்டங்களில் போல்ட் பந்தில் ரவிந்த்ராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டழிழந்தார். இதில் ரோகித் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர் அடித்திருந்தார்.
[
]
பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் நிதானமாக விளையாட, அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் அரைசதம் அடித்தார். அணியின் எண்ணிக்கை 144 ஓட்டங்களாக இருந்தபோது சூர்யகுமார் போல்ட் பந்து வீச்சியில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் 40 பந்துகளில் 62 ஓட்டங்கள் சேர்த்திருந்தார். இதில் 6 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடங்கும்.
அடுத்ததாக களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 5 ஓட்டங்களிலும், வெங்கடேஷ் ஐயர் 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இருப்பினும் பொறுப்புடன் விளையாடிய ரிஷப் பண்ட் அணியை வெற்றி பெறச் செய்தார்.

இதில், இறுதி ஓவரில் பந்து ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் வைடு மற்றும் பவுண்டரி உள்பட 5 ஓட்டங்கள் கிடைத்த நிலையில், அடுத்தப் பந்தில் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழந்தார். இதனால் 4 பந்தில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அடுத்த பந்து வைடாக, அதே பந்தில் அக்சர் படேல் ஒரு ரன் எடுத்து, ரிஷப் பண்டிடம் பேட்டிங்கை கொடுத்தார். அடுத்த பந்திலே பந்தை பவுண்டரிக்கு விளாசி ரிஷப் அணிக்கு வெற்றியை பெற்று தந்தார்.

நியூசிலாந்து தரப்பில் போல்ட் 2 விக்கெட்களும், சௌதி, சாண்ட்னர், மிட்செல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து இதனையடுத்து இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.