முதல் முறையாக அசத்தல் சதம் விளாசிய ரோஹித் சர்மா
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2ஆம் தேதி ஓவல் மைதானத்தில் தொடங்கியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 194 ஆல் அவுட்டானது. இந்திய தரப்பில் விராட் கோலி மற்றும் சர்துல் தாக்குர் அரைசதம் அடித்தனர். அதன்பின் ஆடிய இங்கிலாந்து அணி 290 ரன்கள் அடித்தது. 99 ரன்கள் பின்னிலையில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி இருந்தது. இதனை அடுத்து மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பாக ஆடிய இந்திய அணி கேஎல் ராகுல் 46 ரன்களுக்கு வெளியேறினார்.
பின்பு இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா மற்றும் புஜாரா கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருநாள் போட்டிகளில் 264 ரன்கள் அடித்து இருந்தாலும் இதுவரை இந்தியாவிற்கு வெளியில் சதம் அடிக்காமல் இருந்த ரோஹித் சர்மா, அதனை இன்று முறியடித்து இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சிக்சர் அடித்து தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் தனது எட்டாவது சதத்தை பதிவு செய்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தற்போது ரோகித் சர்மாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது 206 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து 107 ரன்கள் முன்னிலையில் வலுவான நிலையில் உள்ளது இந்திய அணி. புஜாரா அரை சதம் அடித்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.