AI இற்கு எதிராக ரோபோக்கள் போராட்டம்! வரலாகும் காணொளி!
போலந்து நாட்டின் டிஜிட்டல் விவகாரத் துறை அலுவலக வாயிலில், மனிதர்களின் வேலைகளைக் காப்பாற்றும் வகையில் செய்யறிவுப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோஷமெழுப்பியவாறு ரோபோக்கள் கையில் கொடிகளைப் பிடித்துக் கொண்டு போராட்டத்தில் இறங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரோபோக்களின் போராட்டத்தின் விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. கிட்டத்தட்ட 30 ரோபோக்கள் போலந்து நாட்டின் வர்சா மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டன.

மனித வளம் வெளிச்சம் போட்டுக் காட்டவே போராட்டம்
ரோபோக்கள் மூலம், மனிதர்களின் வேலையை தானியங்கி முறையில் செய்து, மனிதர்களின் வேலையைப் பறிக்கும் நிலை அசுர வேகத்தில் நடந்தேறி வரும் நிலையில், அதனை எதிர்த்து, உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதில் ரோபோக்கள் கைகளில் கொடிகளை வைத்துக் கொண்டு, வட்டமாக சுற்றி சுற்றி நடந்து, ஒலிபெருக்கிகள் மூலம் முழக்கங்களை எழுப்பின. பொதுவாக மனிதர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளலாம்.
Robots in Poland protest against AI replacing human beings iPhone Republicans #Sardar2 https://t.co/uIEZEUG0ep
— Tanishka Bakshi (@Soldiers_View) September 10, 2026
ஆனால் யார் கேட்பது, யார் பார்ப்பது, அதுவே, செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ரோபோக்கள் போராடினால் என்று மாற்றி யோசித்ததே இந்த போராட்டத்துக்கான காரணம் என ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
செயற்கை நுண்ணறிவும் ரோபோக்களும், தொழிற்சாலைகளில் கோலோச்சுவதால் மனித வளம் எவ்வாறு பாதிக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டவே இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்