யாழில் வீடு புகுந்து நள்ளிரவில் இடம் பெற்ற கொள்ளை
யாழில் நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் பெருந்தொகை தங்கத்தை கொள்ளையிட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்பிளான் தெற்கு பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையிடப்பட்டுள்ள நகை
சில தினங்களுக்கு முன்னர் அவர்களின் உறவினருக்கு திருமணம் முடிந்த நிலையில் அதற்காக அணிந்த தாலிக்கொடி உட்பட 18 பவுண் தங்கம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
வீட்டின் பின்னால் நுழைந்த திருடர்கள் பூட்டப்பட்டிருந்த வீட்டின் சமையலறை யன்னல் ஊடாக வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
வீட்டிலிருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில் திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளர்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் அது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.