யாழில் கொள்ளையிட சென்றவர்களுக்கு நேர்ந்த தரமான சம்பவம்!
யாழ்.அராலி மேற்குப்பகுதியில், பட்டப்பகலில் வீடுடைத்து உள் நுழைந்த திருடர்கள், தங்க நகைகள் என்று நினைத்து கவரிங் நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டில் இருந்த கணவனும் மனைவியும் தத்தம் தொழில் நிமித்தம் வெளியே சென்றிருந்தனர்.
வீடு முழுவதும் சல்லடைபோட்டுத் தேடுதல்
இந்த நிலையில், இதைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திய திருடர்கள், வீட்டுக் கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்ததுடன், வீடு முழுவதும் சல்லடைபோட்டுத் தேடுதல் நடத்தி ஒருதொகுதி நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
எனினும் கொள்ளையர்கள் திருடிச் சென்ற நகைகள் 'கவரிங் நகைகள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.