பம்பலப்பிட்டியில் கோடிஸ்வர வர்த்தகரின் வீட்டில் கொள்ளை
கொழும்பு பம்பலப்பிட்டி ஸ்கெல்டன் வீதியில் உள்ள கோடிஸ்வரான வர்த்தகரின் ஆடம்பர வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் கைத்துப்பாக்கி, கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் இருந்த அரச அனுமதியுடன் பெறப்பட்ட கைத்துப்பாக்கி, அதற்கான 12 தோட்டக்கள், ரவைக்கூடு, ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபா பணம், 6 ஆயிரம் அமெரிக்க டொலர்கள், 10 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
Google
வீட்டில் வர்த்தகர், அவரது மனைவி மற்றும் வீட்டு வேலை செய்யுமம் இரண்டு பெண்கள் இருந்த போதே இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக விசாரணை நடத்தி வரும் பம்பலப்பிட்டி பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.