எரிபொருள் நிரப்பு நிலையத்தில் துப்பாக்கி முனையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம்!
புத்தளத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கைத்துப்பாக்கியை காண்பித்து இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்றையதினம் (15-09-2024) அதிகாலை இடம்பெற்ற மஹாவெவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அதிகாலை மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபரொருவர், எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளரிடம் கைத்துப்பாக்கியை காண்பித்து சுமார் 207,500 ரூபாவை கொள்ளைடித்துச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் தொடுவாவ பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டின் படி, எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள வர்த்த நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிரிசிவி கமராக்களை பரிசோதனை செய்து, சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்தனர்.