இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி; சந்தேக நபர்கள் யார்?
அநுராதபுரத்திலுள்ள இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத மூன்று பேர் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தினை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் இன்று (28) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் யார்?
அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அருகிலுள்ள தீப்தி எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் பண்டுளகம உபுள் எண்டபிறைஸஸ் நிரப்பு நிலையங்களிலேயே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத மூன்று பேர் தீப்தி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தையும் உபுள் எண்டபிறைஸஸ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் சந்தேக நபர்கள் யார் என்பது அடையாளம் காணப்படாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.