யாழில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுக்களில் ஈடுபடும் நபர்... சிசிரிவியில் சிக்கிய காட்சிகள்!
யாழ்ப்பாணதில் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த நபர் தொடர்பில் சிசிரிவி காணொளிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
யாழில் நல்லூர், மானிப்பாய், கோப்பாய், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சமீபக் காலமாக தொடர் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக துவிச்சக்கர வண்டிகளில் வந்து பகலிலும் அதேபோன்று இரவு நேரங்களிலும் முகமூடிகள், கையுறைகள் அணிந்து அடையாளம் காண முடியாதவாறு வீடுகளுக்குள் உட்குகுந்து தொடர் திருட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
இந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கிற நிலையில் அவை தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், சில தினங்களிற்கு முன்னர் வீடொன்றில் பதிவான சிசிரிவி காணொளிகளில் குறித்த நபரின் முகமூடி கழன்றிருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
இதனால் சந்தேக நபர் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு கேட்டுள்ள பொலிஸார், அவ்வாறு தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.