யாழில் மின்கம்பத்தோடு கொள்ளையடிக்கப்பட்ட வீதி மின் விளக்குகள்!(Video)
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வல்லை பகுதியில் வீதியில் அமைக்கப்பட்டிருந்த வீதி மின் விளக்குகள் கொள்ளையா்களால் கம்பத்தோடு அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோலார் சக்தியில் இயங்கும் மின் கம்பமே இவ்வாறு கொள்ளை அடித்து செல்லப்பட்டுள்ளது. தலா 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 5 ற்கும் மேற்பட்ட வீதி மின்விளக்குகள் இரும்பு கம்பத்துடன் சோ்த்து எடுத்துச் செல்லப்பட்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரவெட்டி பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட மேற்படி வீதி விளக்குகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
அத்தோடு கொள்ளையடிக்கப்பட்ட வீதி விளக்குகளை சாதாரணமாக எடுத்துச் செல்ல முடியாது என்பதுடன் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த இரும்பு கம்பத்தை அடியில் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற மேலதிக செய்திகளின் தொகுப்பு காணொளியில்...