யாழில் நகைக்கடையில் கொள்ளையிட்டவர்கள் கண்டியில் கைது
யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் வருமான வரி பரிசோதகர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு பணத்தினை பறித்துச் சென்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை 5 இலட்சம் ரூபாய் பணத்துடன் பொலிஸார் நேற்றைய தினம் (17) கைது செய்திருந்தனர்.
வாகன சாரதி உட்பட மூவர் கண்டியில் கைது
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து, வாகன சாரதி உட்பட மூவர் கண்டியில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் , கொள்ளை குற்றத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் , சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.
நேற்று முந்தினம் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகைக்கடையினுள் இக்கொள்ளை சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.