மோசடிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; கொழும்பில் குவிக்கப்பட்ட பொலிஸார்
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகளுக்கு எதிராக நடத்தத் தயாராக இருந்த ஆர்ப்பாட்டங்களை தடுக்கும் வகையில், கொழும்பிலுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு நுழையும் வித்யா மாவத்தையை வீதித் தடைகளைப் பயன்படுத்தி தற்காலிகமாக மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், கிரிக்கெட் நிறுவனம் முன்பு பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பெருந்திரளாக நின்று கொண்டிருந்தனர்.
கிரிக்கெட் நிறுவன நுழைவு வாயில் அருகே விளையாட்டு இரசிகர்கள் தேசியக் கொடியை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலைமைகள் காரணமாக கிரிக்கெட் நிறுவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்ததுடன், கலகத் தடுப்புப் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப் படை மற்றும் இராணுவமும் அழைக்கப்பட்டிருந்தன.