தொடர்மழையால் பெருக்கெடுக்கும் ஆறுகள் ; மக்களே அவதானம்!

Department of Meteorology Floods In Sri Lanka Cyclone
By Sulokshi Oct 26, 2026 06:45 AM GMT
Report

  நாட்டில் நிலவும் தொடர்ச்சியான பலத்த மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தெதுரு ஓயா, ராஜங்கனை, குக்குளே கங்கை மற்றும் கலாவாவி ஆகிய நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், குறித்த நீர்த்தேக்கங்களுக்குக் கீழே அமைந்துள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்மழையால் பெருக்கெடுக்கும் ஆறுகள் ; மக்களே அவதானம்! | Rivers Swelling Due To Continuous Rain Srilanka

 மக்களே அவதானம்....

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் எட்டு வான் கதவுகள் இரண்டு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தெதுரு ஓயாவுக்கு வினாடிக்கு 10,400 கன அடி நீர் வெளியிடப்படுகிறது. மழைவீழ்ச்சி மற்றும் நீர்த்தேக்கத்திற்குள் வரும் நீரின் அளவைப் பொறுத்து எதிர்வரும் காலங்களில் வான் கதவுகள் திறக்கப்படும் அளவு மாறக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

ராஜங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டு கலா ஓயாவுக்கு வினாடிக்கு 3,800 கன அடிக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் வெளியேற்றம் முற்பகல் 9 மணியளவில் வினாடிக்கு 8,000 கன அடியாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்டத்தின் நடுவே நட்சத்திர ஹோட்டலில் ஓய்வுக்கு சென்ற சர்ச்சை தேரர்!

போராட்டத்தின் நடுவே நட்சத்திர ஹோட்டலில் ஓய்வுக்கு சென்ற சர்ச்சை தேரர்!

மேலும், குக்குளே கங்கை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையைக் கருத்திற்கொண்டு அதன் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வினாடிக்கு 45 கன மீற்றர் நீரும், மின் உற்பத்தியின் போது வினாடிக்கு 48 கன மீற்றர் நீரும் வெளியேற்றப்படுகின்றன.

அதற்கமைய, நீர்த்தேக்கத்திலிருந்து குடா ஓயாவுக்கு வெளியேற்றப்படும் மொத்த நீரின் அளவு வினாடிக்கு 93 கன மீற்றராக உள்ளதாக நீர்த்தேக்கப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கலாவாவியின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் மழையின் காரணமாக தம்புள்ள ஓயா ஊடாக கலாவெவுக்கு வினாடிக்கு 5,500 கன அடிக்கு நெருக்கமான நீர் வந்து சேருவதுடன், தற்போது அதன் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளது.

தொடர் மழையினால் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு

தொடர் மழையினால் மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு

கலாவாவி வான் பாயும் அபாயத்தைக் கருத்திற்கொண்டு அதன் அவசர வான் கதவுகள் இரண்டும் ஆறு அங்குலம் வீதம் திறக்கப்பட்டு, அதன் மூலம் கலா ஓயாவுக்கு வினாடிக்கு 511 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே நீர்த்தேக்கங்களின் கீழ் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நீர் நிலைகளில் ஏற்படும் நீர்மட்ட மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், வான் கதவுகள் திறப்பு மற்றும் நீர் வெளியேற்றம் தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US