உணவுப்பொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் ஆபத்து
எரிபொருள் தட்டுப்பாட்டால் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருள்களை தற்போது மேல் மாகாணத்துக்கு மட்டும் விநியோகிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை துறைமுக கொள்கலன் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
உணவுப்பொருள்களைக் கொண்டு செல்வதற்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து துறைமுகத்தில் உள்ள கொள்கலன் இறக்கும் தொழிலாளர்கள் அடுத்த வாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதனால் நாட்டின் ஏனைய பகுதிகளில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக அகில இலங்கை துறைமுக கொள்கலன் போக்குவரத்துக் கழகத் தலைவர் சனத் மஞ்சுள சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் எதிர்வரும் சில நாள்களில் நாட்டில் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.