நில்வள கங்கை தாழ்நிலப் பகுதியில் வௌ்ளம் ஏற்படும் அபாயம்
நில்வள கங்கை தாழ்நிலப் பகுதியில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதற்கமைய, அக்குரெஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, கம்புருபிட்டிய, திஹகொட மற்றும் மாத்தறை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட நில்வள கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் இந்த அபாயம் காணப்படுவதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

நில்வள கங்கையின் மேல் மற்றும் மத்திய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை மற்றும் நதி நீர்மானிகளின் நீர் மட்டங்களை பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதிகள் ஊடாகப் பயணிக்கும் சாரதிகள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவித்தல் நாளை (16) மாலை 6.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.