இலங்கையில் உள்ள மாவட்டம் ஒன்றில் கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம்?
இலங்கயில் கேகாலை மாவட்டத்தில் இருந்து மூன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கேகாலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக எல்லையில் இந்த கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 05 பேர் நேற்றைய தினம் (03-01-2023) வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 671,903 என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான மரணங்கள் எதுவும் இந்த ஆண்டின் இதுவரையான நாட்கள் வரை பதிவாகவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கிடையில், கொரோனா வைரஸின் உலகளாவிய ஆபத்து குறித்து இலங்கை கவனம் செலுத்துவது முக்கியம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா அபாயத்தைத் தவிர்ப்பதற்கு முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.