மீண்டும் வரியை அதிகரிக்க நடவடிக்கை: மக்களை பழிதீர்க்கும் அரசாங்கம்!
அரசாங்கம் வரியை அதிகரித்து வருவதுடன், மறுபுறம் அடக்குமுறையின் மூலம் மக்களை கொலை செய்துவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardene) குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் (03-05-2022) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ருவான் விஜேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய வரவு – செலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இவ்வாறான நிலையில், அரசாங்கத்தின் முறையற்ற தீர்மானங்கள் காரணமாக ஏற்பட்ட நெருக்கடிக்கு தீர்வாக வரி அதிகரிக்கப்படுவதனை தமது தரப்பு எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களை துப்பாக்கி குண்டுகளாலும், அச்சுறுத்துவதன் ஊடாகவும் மேலும் துன்புறுத்தல்களை மேற்கொள்வதற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி செயற்பட்டுவருவதாகவும் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.