எண்ணெய் விலை உயர்வு; பயண கட்டணத்தை உயர்த்திய இந்திய விமான நிறுவனங்கள்
வளைகுடா போரால் உலகளவில் எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் இந்திய விமான நிறுவனங்கள் எரிபொருள் வரியாக பணத்தினை உயர்த்தி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போரினால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இந்தியாவின் இரண்டு பெரிய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ, பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அறிவித்துள்ளன.

பயணிகளிடம் கூடுதல் கட்டணம்
மார்ச் 2026 தொடக்கத்தில் இருந்து, ஒரு விமான நிறுவனத்தின் இயக்கச் செலவுகளில் கிட்டத்தட்ட 40% பங்களிக்கும் விமான விசையாழி எரிபொருள் (ATF), விநியோக தடங்கல்கள் காரணமாக குறிப்பிடத்தக்க விலை உயர்வைக் கண்டுள்ளது என்று ஏர் இந்தியா இந்த வார தொடக்கத்தில் ஒரு அறிக்கையில் கூறியது.
இதன் விளைவாக, இந்த எரிபொருள் செலவு உயர்வை ஈடுகட்ட ஏர் இந்தியா டிக்கெட் கட்டணங்களை $90 வரை உயர்த்தும் என குறிப்பிடப்படுள்ளது. அதேவேளை இண்டிகோ, விமான எரிபொருளின் அதிகரித்த செலவுகளை ஈடுகட்ட கிட்டத்தட்ட $30 வரை கட்டணங்களை உயர்த்தப்போவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.