வவுனியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: கடந்த 24 மணிநேரத்தில் இரண்டு பேர்
வவுனியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இருவர் இன்று மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வவுனியா மதவுவைத்தகுளம் கொரோனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரியகுளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா தொற்று நோயால் இன்று மரணமடைந்துள்ளார்.
இதேவேளை வவுனியா உக்கிளாங்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அத்தோடு அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் அவர் வைத்தியசாலையின் கொரோனா தொற்று விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மரணமடைந்துள்ளார்
வவுனியாவில் கொரோனா தொற்றால் இன்று இருவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.