கோத்தாவின் அரசை மிரட்டும் ரிஷாட்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், ரிசாட் பதியுதீனும், அவரது சகோதரர் ரியாச் பதியுதீனும் குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர்களது வீடுகளில் வைத்துக் கைது செய்யப்பட்டு தொடர்ந்து 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 16-வது நாளை எட்டியுள்ளது.
2019 அரசுத்தலைவர் தேர்தலின் போது, மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன், 222 அரசு பேருந்துகள் மூலம் இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றதன் மூலம் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் அவரது அமைச்சின் கீழிருந்த ரூபா 95 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை முறைகேடாக பயன்பத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், பதியுதீன் மீது குற்றம்சாட்டப்பட்டு, 2020 அக்டோபர் 19 இல் அவரது தெகிவளை வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட போது அவரது கட்சியை சேர்ந்த மூவர் அரசாங்கத்துக்கு ஆதரவளித்தனர்.
அதில் அவருடைய ஏற்பாட்டில்தான் வாக்களித்தாக உறுப்பினர்கள் கூறி வந்தார்கள் . அத்துடன் அவர்களுக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுத்தது . அப்பொழுது ஒரு உறுப்பினர் கடிதம் எழுதி இருக்கிறார்.
அவர் இன்னொருவரின் தொலைபேசியில் பசில் ராஜபக்ஸவுடன் உரையாடி உள்ளார் . அந்த உரையாடலுக்கு அமையத்தான் தான் வாக்களித்ததாக அறிவித்துள்ளார் .
இருந்த போதும் இவர்கள் அவரின் கைதுக்கு முன்பு அரசாங்கத்தின் முக்கியமான பதவியில் உள்ள அரசியல் வாதிகளை சந்தித்து உங்களுக்கு அவரின் உதவியுடன் வாக்களித்தால் தற்போது எம்மை கட்சியில் இருந்து விலக்குவதற்கு அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார். என்பதை தெரிவித்து இருக்கிறார் .