மனைவியால் மற்றுமொரு சிக்கலில் ரிஷாட்!
தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றுமொரு மோசடியான செயலில் சிக்கியுள்ளார். கடந்த 6 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்த போது, வெலிக்கடை மகளிர் சிறைச்சாலைக்கு அவர் தொலைபேசி அழைப்பு எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி அன்றியதினம் காலை 11:55 மணியளவில் ரிஷாத் பதியுதீனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக வெலிக்கடை மகளிர் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அழைப்பை எடுத்த எம்.பி ரிஷாத் பதியுதீன், வெலிக்கடை மகளிர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மனைவியுடன் பேச விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
எனினும், வெலிக்கடை மகளிர் சிறைச்சாலை அதிகாரி அவரது கோரிக்கையை மறுத்ததுடன், அது சிறைச் சட்டத்திற்கு முரணான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து வந்த தொலைபேசி எண் நாடாளுமன்றத்திற்கு சொந்தமானது என சிறைத்துறை சந்தேகிக்கிற நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.