இலங்கையின் பணவீக்கத்தில் பதிவான அதிகரிப்பு
Sri Lanka
Sri Lanka Inflation
Economy of Sri Lanka
By Vironika
இலங்கையின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான வருடாந்த பணவீக்கம், ஜூன் மாதத்தில் 6.5 சதவீதமாக காணப்பட்ட நிலையில், ஜூலையில் 0.7 சதவீதப் புள்ளிகளால் அதிகரித்துள்ளது.

உணவுப் பணவீக்கம்
ஜூன் மாதத்தில் 3.3 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், ஜூலையில் 4.9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதேவேளை, உணவல்லாத பொருட்களுக்கான பணவீக்கம் 9.3 சதவீதத்திலிருந்து 9.2 சதவீதமாக சிறிதளவு குறைந்துள்ளது.
உணவுப் பணவீக்கம் அதிகரித்த போதிலும், ஜூலை மாதத்தில் பதிவான ஒட்டுமொத்த பணவீக்கத்திற்கு உணவல்லாத பொருட்களே பிரதான பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US