கொழும்பில் மீண்டும் வெடித்த போராட்டம்; படையினர் குவிக்கப்பட்டதால் பதற்றம்!
கொழும்பு - பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கொழும்பு - பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது பிரதமரின் இல்லத்தை நோக்கி படையெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் சற்றுமுன் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று காலை நாட்டிலிருந்து அவர் வெளியேறியிருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அப்பகுதியில் பெருந்திரளான அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக கொழும்புதகவல்கள் கூறுகின்றன.