ஹோட்டல் உரிமையாளர்களுக்கு விற்கப்பட்ட 13 வயது சிறுமி ; 5 நாட்களில் 30 பேர் பாலியல் பலாத்காரம்
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் 13 வயது சிறுமி ஒருவர், ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வீட்டை விட்டு காணாமல் போன அச்சிறுமியை, ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் ஹோட்டல் உரிமையாளர் ஒருவருக்கு விற்றுள்ளார்.

தீவிரப் போராட்டம்
அங்கிருந்து பல ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டு, அச்சிறுமி இந்த கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வலி ஏற்படும் போதெல்லாம், குற்றவாளிகள் அவரை கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்ற பல ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களைப் பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ஸ்ரீ கங்காநகரில் சட்டவிரோதமாக இயங்கும் 150-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களை மூட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
இந்த கொடூரத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.