தலைநகரில் அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கப்பட்ட அரிசி பொதிகள் மீட்பு
அரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதிக விலையில் அதனை விற்பனை செய்வதற்காக புறக்கோட்டை பிரதேச களஞ்சியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை அரிசியை நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொதிகள்
சந்தைக்கு அதிக விலையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ எடை கொண்ட 3000 பொதி அரிசியை இவ்வாறு கைப்பற்றியுள்ளதாக குறித்த அதிகார சபையின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது இந்த அரசி கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எதிர்வரும் ரமழான் பண்டிகை காலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இந்த அரிசியை பதுக்கி வைத்திருந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.