சீனாவின் ரீனியம் தங்கத்தில் கலப்படம்; மக்களே உஷார்
தங்கத்தில் கலப்படம் செய்வதாக புகார் எழுந்துள்ளதால் தன்கம் வாங்குவோர் அவதானமாக இருக்குமாறு வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ரீனியம் என்ற வேதிப்பொருளை தங்கத்தில் கலப்பதாக செய்திகள் பரவி வருகிறது இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தங்கத்தின் விலை ஒரு பவுன் ஒரு லட்சத்தை தொட்டது. அதன் பின் ஒரு லட்சத்து 15 ஆயிரம் வரை சென்றது.
ஆனால் கடந்த 10 நாட்களில் தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து இன்று கிட்டத்தட்ட 90 ஆயிரம் ரூபாய்க்கு வந்து விட்டது. 75 ஆயிரம் ரூபாய் வைர சவரன் தங்கத்தின் விலை குறையும் என சிலர் சொல்கிறார்கள்.
அது நடக்குமா என்பது தெரியவில்லை. தங்கத்தின் விலை சவுரனுக்கு 90 ஆயிரம் வரை வந்து விட்டதால் தங்கத்தை வாங்கும் ஆர்வம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி பலரும் தங்கத்தில் கலப்படம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ரீனியம் என்ற வேதிப்பொருளை தங்கத்தில் கலப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
இந்நிலையில், தங்கத்தில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தர நிர்ணய ஆணையம் எச்சரித்துள்ளது.
தங்கத்தில் கலப்படம் செய்வதற்கான பொருளை தயாரிப்பவர்கள், பயன்படுத்துபவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.