தகவல் வழங்கினால் 1 மில்லியன் ரூபா சன்மானம் ; பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு!
கடந்த சில தினங்களின் முன்பு பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக அம்புலன்ஸ் சாரதி ஒருவரை சுட்டுக் கொல்ல முயற்சித்த சந்தேக நபர்கள் இருவரின் புகைப்படங்களை பொலிஸார் இன்று வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
அதன்படி, சந்தேகநபர்கள் தொடர்பில் துல்லியமான தகவல்களை வழங்குபவருக்கு 1 மில்லியன் ரூபா சன்மானம் வழங்க பொலிஸார் எதிர்பார்த்துள்ளனர் .
அவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர், மேல் மாகாண குற்றப் பிரிவு – 071-8592686 பணிப்பாளர், களுத்துறை குற்றப் பிரிவு – 071-8592745