எதிரிகளை கொலை செய்தால் பரிசு; உக்ரைனின் அதிரடி அறிவிப்பு
உக்ரைனின் செர்ஹினவ் பகுதியில் நுழைந்துள்ள எதிரிகளை கொலை செய்வோருக்கு 300 டாலர் பரிசு வழங்கப்படும் என செர்ஹினவ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ராஷியாவின் போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வரும் நிலையில் தாயகத்தை பாதுகாப்பதற்கு அந்த நாட்டு மக்கள் கையில் ஆயுதம் ஏந்த தொடங்கியுள்ளனர்.
ரஷிய வீரர்களை எதிர்த்து போராட உக்ரைன் சிறைகளில் உள்ள கைதிகளை விடுவிக்க உள்ளதாக அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்தார்.
இந்நிலையில் ரஷியாவுக்கு ஆதரவாக பெலாரஸ் படைகள் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன்படி ராணுவ டாங்கிகளை கொண்டு வந்தால் 2,50,00 உக்ரைன் பணம் பரிசு வழங்கப்படும் எனவும் பெலாரஸ் படைகள் நுழைந்துள்ள நிலையில் செர்னிஹவ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரைன் குப்பியன்ஸ் பகுதியில் நுழைந்துள்ள் ரஷிய படைகளை முற்றுகையிட்டு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.